உள்ளூர் செய்திகள்

கோயில் உற்ஸவம்

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே மேட்டுநீரேத்தானில் கோட்டை கருப்பு சடையாண்டி சுவாமி கோயில் ஆடி உற்ஸவம் 3 நாட்கள் நடந்தது. கோயிலில் இருந்து அலகு குத்தி, தீர்த்த குடம், பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். சுவாமிக்கு 21 அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனைகள் செய்து சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. 2ம் நாள் கோட்டை கருப்பு கோயிலில் இருந்து மேளதாளம், வான வேடிக்கையுடன் முளைப்பாரி, பொங்கல் பானை ஊர்வலம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி