உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்தில் ஏடு கொடுக்கும் விழா

குன்றத்தில் ஏடு கொடுக்கும் விழா

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 8ம் நாள் திருவிழாவாக நேற்று சிவகாமி அம்பாளுக்கு நடராஜ பெருமான் ஏடு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. விடையாத்தி சப்பரங்களில் நடராஜர், சிவகாமி அம்பாள் தனித்தனியாக புறப்பாடாகி வீதிஉலா முடிந்து ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினர். நடராஜர் கரத்தில் இருந்த ஏடுகளை சிவாச்சாரியார்கள் பெற்று சிவகாமி அம்பாளிடம் சேர்ப்பித்தனர். இரவு பச்சைக் குதிரை வாகனத்தில் சுவாமி, தெய்வானை ரத வீதிகளில் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை