போலீசார் குழந்தைகளை பாராட்டிய கமிஷனர்
மதுரை : மதுரை கே.புதுார் தே.நொபிலி மெட்ரிக் பள்ளியில் லிம்ராஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ், நாயகம் மார்ஷியல் ஆர்ட்ஸ் அமைப்புகளின் சார்பில் 5 முதல் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான முதல் மாநில சிலம்ப போட்டிகள் நடந்தன.இதில் ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, சுருள்வாள், குழுப்போட்டிகள் என 4வகை பேட்டிகளில் 700 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் மதுரை மாநகர் போலீசாரின் குழந்தைகளும் பங்கேற்றனர். இதில் மதுரை ரிசர்வ்லைன் மாரியம்மன் சிலம்பாட்ட குழு சிலம்பம் குழுப்போட்டியில் 2ம் இடம் பெற்றது. வெற்றி பெற்ற போலீசாரின் குழந்தைகள், பயிற்சியாளர்கள் ரஞ்சித், தினேஷ்குமார் ஆகியோரை போலீஸ் கமிஷனர் லோகநதன் பாராட்டினார்.