| ADDED : ஜூலை 01, 2024 06:45 AM
மதுரை : மதுரை மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்க கூட்டமைப்பு பொதுக் குழுக் கூட்டம் தலைவர் முனியசாமி தலைமையில் நடந்தது. செயலாளர் முனியாண்டி வரவேற்றார். இணைச் செயலாளர் சர்புதீன், துணை தலைவர் மணி, செயலாளர் முருகன், வரிவசூலிப்போர் சங்க மாநில செயலாளர் செந்தில்குமார், இணை செயலாளர் ரங்கராஜன் முன்னிலை வகித்தனர்.புதிய ஓய்வூதிய திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ ராஜேஸ்வரன், தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஜனார்த்தனன் உட்பட பலர் பேசினர்.மதுரை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி மூப்பு அடிப்படையில் 2013ல் தற்காலிகமாக நியமித்து காலமுறை ஊதியம் பெற்றுவரும் 69 ஓட்டுனர்களை நிரந்தரமாக்க வேண்டும். வருவாய் உதவியாளர் பணியிடங்களை அனைத்து மாநகராட்சிகளிலும் நிரந்தரமாக ஏற்படுத்தி தரவேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்த 100க்கும் மேற்பட்ட செயல் திறனற்ற பணியாளர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் உதவியாளர், இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் பாலகிருஷ்ணன்,ஜெய்சங்கர் நன்றி கூறினர்.