மேலும் செய்திகள்
அணைகள் நீர்மட்டம் சரிவு; பாசன விவசாயிகள் கவலை
13-Feb-2025
மதுரை: மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகளவாக பெரியபட்டியில் 24 மி.மீ., மழை பெய்துள்ளது.நேற்று அதிகாலை பதிவான மழை விவரம் (மி.மீ.,): மதுரை கிழக்கு 9.8, தல்லாகுளம் 11, பெரியபட்டி 24.2, விரகனுார் 1.4, சிட்டம்பட்டி 12.2, கள்ளந்திரி 18, இடையபட்டி 2, தனியாமங்கலம் 20, மேலுார் 20.2, புலிப்பட்டி 22.8, வாடிப்பட்டி 11, சோழவந்தான் 10, சாத்தையாறு அணை 13.8, மேட்டுப்பட்டி 10.4, ஆண்டிப்பட்டி 8.4, உசிலம்பட்டி 13, குப்பணம்பட்டி 7, விமான நிலையம் 5.8, திருமங்கலம் 8.2, பேரையூர் 9.8, எழுமலை 1.8, கள்ளிக்குடி 28.4. அணையில் நீர் இருப்பு
பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.1 அடி. (மொத்த உயரம் 152 அடி). அணையில் 1576 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 54 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 322 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 59.61 அடி. (மொத்த உயரம் 71 அடி). அணையில் 3531 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 177 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 422 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது.சாத்தையாறு அணையின் நீர்மட்டம் 25.8 அடி. (மொத்த உயரம் 29 அடி). 44.55 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்தோ, வெளியேற்றமோ இல்லை.
13-Feb-2025