மேலும் செய்திகள்
பொறுப்பேற்பு
3 hour(s) ago
சொற்பொழிவு
3 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி / அக்.8
3 hour(s) ago
தேசிய அஞ்சல் வார சிறப்பு முகாம்கள்
3 hour(s) ago
மதுரை: ஆண்டார் கொட்டாரம் பகுதியில் அமைத்த ரோடு கண்துடைப்பாக நடந்துள்ளதாக கூறப்படுவது குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.மதுரை கிழக்கு ஒன்றியம் ஆண்டார் கொட்டாரத்தில் இருந்து சீகன்குளம் காத்தவனேந்தல் வழியாக ஒத்தப்பட்டி வரை ரோடு செல்கிறது. இந்த ரோடு மோசமானதையொட்டி, சாலைப் பணி ஓராண்டுக்கும் மேலாக துவங்கவில்லை. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் தலையீட்டின்படி பணிகள் துவங்கின. சாலையின் இருபுற கரைகளை வலுப்படுத்தி அனுமதித்த அளவில் பணி நிறைவேற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இடையில் சாலை ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்புக்கு பணிந்தும், அரசியல் தலையீடு காரணமாகவும், 10 அடி அகலத்தில் அவசர கதியில் கண்துடைப்பாக பணிகளை நடத்தியுள்ளனர். அகலம் குறைவாக உள்ளதால் வாகனங்கள் விலக முடியாத அளவில் ரோடு அமைந்துள்ளது.இந்நிலையில் ஊர் பொதுமக்கள் சார்பில் சாலையை அனுமதித்த அளவில் அமைக்க ஊரக வளர்ச்சித்துறை உதவிப் பொறியாளர், செயற்பொறியாளர், தாசில்தார் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளிக்கப்பட்டது. பொறியாளர்கள், உதவி இயக்குனர்கள், அதிகாரிகள் பொதுமக்களிடம் விசாரித்தனர்.தாசில்தார் முன்னிலையில் அளவை மேற்கொண்டு, சாலையை அகலப்படுத்தி பின்னர் ரோடு விரிவாக்க பணி துவங்குவது என முடிவெடுத்தனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago