உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற நிலை வந்துவிட்டது காங்., எம்.பி.,க்கும் ஆசை

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற நிலை வந்துவிட்டது காங்., எம்.பி.,க்கும் ஆசை

மதுரை: விருதுநகர் தொகுதி எம்.பி., மாணிக்கம் தாகூர் மதுரையில் கூறியதாவது:தமிழகத்தை பொறுத்தவரை கேரளா போன்று அடுத்த கட்டத்திற்கு, கூட்டணி ஆட்சிக்கு நகர வேண்டிய காலம் வந்து விட்டதோ என்ற நிலை உருவாகி இருக்கிறது. அதிகாரத்திலும், ஆட்சியிலும் பங்கு என்ற நிலை வருவதற்கான காலம் வந்துவிட்டது போன்று தெரிகிறது. திருமாவளவன் தனக்கென ஒரு லட்சியம், குறிக்கோளை வைத்து இயக்கத்தை நடத்தி வருகிறார். அவருடைய வார்த்தை மதிப்பளிக்கப்பட வேண்டியது. மதுரை விமானநிலையத்தில் 24 மணி நேர சேவை குறித்த தகவல் வந்துள்ளது. ஏற்கனவே அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்திருந்தோம். தற்போது முதல் படி தாண்டி உள்ளோம்.சர்வதேச விமான நிலையம், ஓடுதள பாதை விரிவாக்கம் போன்ற வேலைகளும் அடுத்து நடக்கும் என நினைக்கிறேன்.தமிழகத்தில் ஆட்சி, அதிகார பங்கு குறித்து செப். 19ல் நடக்கும் காங்., செயற்குழுவில் ஆலோசிக்கப்படும். 2006ல் தி.மு.க., 96 எம்.எல்.ஏ., க்கள், காங்., 36 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தபோதும் அரசை ஆதரித்து துணை நின்றோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை