உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருப்பாலையில் நாளை கிருஷ்ண ஜெயந்தி

திருப்பாலையில் நாளை கிருஷ்ண ஜெயந்தி

திருப்பாலை: மதுரை இஸ்கான் சார்பில் திருப்பாலை கிருஷ்ண பலராமர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்திநாளை (ஆக.,26) கொண்டாடப்படுகிறது. காலை 8:00 முதல் இரவு 9:00 மணி வரை கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு சிறப்பு தரிசனத்துடன், பிரசாதமும் வழங்கப்படுகிறது.அருகிலுள்ள விஜயா மகாலில் 3 முதல் 12 வயது குழந்தைகளுக்கு 'ராதா - கிருஷ்ணா' மாறுவேட போட்டிகள், பரதநாட்டியம், கர்நாடக இசை நிகழ்ச்சி காலை 8:30 முதல் மாலை 4:30 மணி வரை நடைபெறும். மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை சினிமா, சின்னத்திரை கலைஞர்களுடன் கிருஷ்ண ஜெயந்திகொண்டாட்டம் நடைபெறும். விபரங்களுக்கு 96779 14980ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !