உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வர்த்தகர் சங்க செயற்குழு

வர்த்தகர் சங்க செயற்குழு

மதுரை: மதுரையில் நுகர்பொருள் மற்றும் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்க செயற்குழுக் கூட்டம் தலைவர் குற்றாலிங்கம் தலைமையில் நடந்தது. செயலாளர் மோகன், பொருளாளர் இளங்கோவன், துணைத் தலைவர்கள் பாலமோகன், ஜெயவேல், கணபதி, துணைச் செயலாளர் செல்வம், ஜெயராஜ், தனசேகரன், ஜெய்சங்கர் பங்கேற்றனர். புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் நடத்துதல், வணிக நிறுவனங்களுக்கு குப்பை வரியை நீக்கிய மாநகராட்சிக்கு நன்றி தெரிவிப்பது, தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து பேசுதல், 2500 சதுர அடி வரை குடியிருப்பு கட்ட கட்டுமானத்திற்கு அனுமதி தேவையில்லை என்ற தமிழக அரசின் அறிவிப்பு குறித்து பேசுவது உட்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













புதிய வீடியோ