பாரம்பரிய உணவு திருவிழா
மதுரை : தானம் அறக்கட்டளையின் பிரான்ஸ், நெதர்லாந்து நாட்டை சேர்ந்த தானம் நண்பர்கள் குழு சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா, கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாம் மதுரை அலுவலகத்தில் நடந்தது. நிர்வாக இயக்குனர் வாசிமலை தலைமை வகித்தார்.மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவு, பாரம்பரிய நெல் ரகங்களில் தயாரித்த உணவு கண்காட்சியில் இடம்பெற்றது. டாக்டர்கள் முத்துக்குமார், பாரதி தலைமையில் 180 பேருக்கு ரத்தப்பரிசோதனை, சர்க்கரை அளவு, கால் எலும்பு பலம் அறியும் பரிசோதனை செய்யப்பட்டது. மாலையில் பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள மேலக்கோட்டை பூங்காவில் அரசு இசைக்கல்லுாரி மாணவர்களின் கரகாட்டம், கொம்பு, பறை இசைத்தல், மாடு, பொய்க்கால் குதிரை, மயில், மரக்கால் ஆட்டம் நடந்தது. கோவிந்தராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். அறக்கட்டளையின் சுற்றுலா மைய ஆலோசகர் பாரதி, குழுத் தலைவர் சரவணன், மூத்த திட்ட நிர்வாகி கார்த்திகேயன், முதன்மை செயல் அலுவலர் ராஜபாண்டியன், ஒருங்கிணைப்பாளர் ஆபிரகாம் ஸ்டான்லி ஏற்பாடுகளை செய்தனர்.