உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஏ.வி. பாலப்பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

ஏ.வி. பாலப்பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

மதுரை: மதுரை கோரிப்பாளையம் பாலப்பணியின் ஒருபகுதியாக ஏ.வி. பாலம் நுழைவாயிலில் கட்டுமான பணி நடக்க உள்ளது. இதன்காரணமாக இன்று(பிப்.28) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.கோரிப்பாளையத்தில் இருந்து சிம்மக்கல், நெல்பேட்டை செல்லும் வாகனங்கள் தேவர் சிலையில் இருந்து மீனாட்சி கல்லுாரி ரோட்டில் சென்று புதிதாக கட்டப்பட்டுள்ள இணைப்பு பாலம் வழியாக ஏ.வி.பாலத்தில் செல்ல வேண்டும். யானைக்கல் பாலம் சந்திப்பில் இருந்து மீனாட்சி கல்லுாரி வழியாக கோரிப்பாளையம் வர வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அண்ணாநகர், தெப்பக்குளம், காமராஜர்ரோடு செல்லும் வாகனங்கள் ஏ.வி. பாலம் இடப்புறம் உள்ள மூங்கில் கடை வழியாக வைகை வடகரையில் செல்ல வேண்டும். திண்டுக்கல், ஆரப்பாளையம் பகுதிக்கு செல்லும் கனரக வாகனங்கள், மூங்கில் கடைகள் வழியாக சென்று வலதுபுறம் திரும்பி கல்பாலம், குமரன் ரோடு, செல்லுார் கபடி ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை