உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

வாடிப்பட்டி : வாடிப்பட்டி வட்டார வேளாண் துறை சார்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் முள்ளிபள்ளம் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் சமச்சீர் உர பயன்பாடு குறித்த மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் நடந்தது.வேளாண் துணை இயக்குனர் அமுதன் (மத்திய திட்டம்) தலைமை வகித்தார். மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்ட ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விளக்கினார். துணை இயக்குனர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராணி, உதவி இயக்குனர் பாண்டி, வேளாண் அலுவலர்கள் முத்துலட்சுமி, பானுமதி சமச்சீர் உரப்பயன்பாட்டின் முக்கியத்துவம் உர கட்டுப்பாட்டு, உரம் பயன்படுத்தும் முறைகள் பசுந்தாள் இலைகளை பயன்படுத்துதல் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கினர்.வேளாண் அலுவலர்கள் சோபனா, ஜோஸ்பின் நிர்மலா, சத்தியவாணி, துணை வேளாண் அலுவலர் பெருமாள், உதவி அலுவலர்கள் விக்டோரியா, தங்கையா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியா, உதவி மேலாளர்கள் பூமிநாதன், அருணா தேவி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி