உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வேளாண் திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

வேளாண் திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

திருமங்கலம்: கள்ளிக்குடி தாலுகா வேளாண்துறை சார்பில் ஒடைப்பட்டி கிராமத்தில் கிராம முன்னேற்றக் குழுவிற்கான காரீப் பருவ பயிற்சி நடந்தது.இப்பயிற்சியில் அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரகலா பயிற்சியை தொடங்கி வைத்தார். வேளாண் அலுவலர் கீதா காரீப் பருவத்தில் சாகுபடி செய்யும் பயிர்களில் களை மேலாண்மை குறித்து விளக்கினார். துணை அலுவலர் குமாரிலட்சுமி இயற்கை வேளாண்மை குறித்தும், மானியத் திட்டங்கள் பற்றியும் விளக்கினார்.ஓய்வு வேளாண் அலுவலர் மகாராஜன் மண் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்தும், வேளாண் பயிர்களில் உரங்களின் நிர்வாகம் பற்றியும் விளக்கினார். ஓடைப்பட்டி ஊராட்சி உதவி வேளாண் அலுவலர் நாகமோகன் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும், தொழில்நுட்ப மேலாளர் இந்திராதேவி பயிர்களில் பூச்சி நோய் மேலாண்மை குறித்தும், காட்டுப்பன்றி விரட்டி மருந்து குறித்தும் பேசினர். உதவி மேலாளர் லாவண்யா நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி மேலாளர் யுவராஜ்குமரன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ