உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போக்குவரத்து தொழிலாளர் கூட்டம்

போக்குவரத்து தொழிலாளர் கூட்டம்

மதுரை : அரசு போக்குவரத்து எச்.எம்.எஸ்., தொழிலாளர் சங்க மதுரை மண்டல கூட்டம் தலைவர் ரவி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கண்ணன், ஒச்சாதேவன் முன்னிலை வகித்தனர். ஆலோசகர் அங்குசாமி வரவேற்றார். பொதுச் செயலாளர் ஷாஜஹான், பொருளாளர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பேசினர்.அரசு, போக்குவரத்து கழகங்களில் 2 ஆயிரம் டிரைவர், கண்டக்டர்களை நியமிக்க தனியார் நிறுவனங்களுடன் கைகோர்த்து செயல்படுத்தும் கொள்கையை கண்டிப்பது, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பஸ்கள் விபத்தில் சிக்கி உயிர்ப்பலி ஏற்படும்போது டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசை கண்டிப்பது, போக்குவரத்துக் கழக ஊழியர்களையும் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ