உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீதிபதி சந்துரு அறிக்கையை அரசு நிராகரிக்க வலியுறுத்தல்

நீதிபதி சந்துரு அறிக்கையை அரசு நிராகரிக்க வலியுறுத்தல்

மதுரை: 'ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கமிட்டியின் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் நிராகரிக்க வேண்டும்' என ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில பொதுச்செயலாளர் சுந்தரவடிவேல் வலியுறுத்தியுள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது: பள்ளி மாணவர்களிடையே ஜாதிய சிந்தனைகளை களைய உருவான ஓய்வு நீதிபதி சந்துரு கமிட்டி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கருத்துகள் தவறானவை. இது மாணவர்களின் புற அடையாளங்களை மறைப்பதையே தீர்வாக கொண்டிருக்கிறது. 'நீறு இல்லா நெற்றி பாழ்' என்னும் அவ்வையின் கூற்று குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. மாணவ சமூகத்தில் ஜாதிய உணர்வு சமீபத்தில் தான் தோன்றியது. அதற்கான உண்மை காரணத்தை அவரின் அறிக்கை ஆய்வு செய்யவில்லை. சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் ஒருதலைபட்சமான இவ்வறிக்கையை அரசு புறக்கணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை