வடமலையான் மருத்துவமனை பல்நோக்கு சிகிச்சை முகாம்
மதுரை: மதுரை வடமலையான் மருத்துவமனை, உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்நோக்கு மருத்துவ சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. நிர்வாக நீதிபதி சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். நீதிபதிகள் சேஷசாயி, ஜெகதீஷ் சந்திரா, சரவணன், நக்கீரன், மஞ்சுளா, சவுந்தர் இதய மருத்துவ பிரிவு, பொது மருத்துவ பிரிவு, எலும்பு மூட்டு பிரிவு, நுரையீரல் பிரிவு, மகளிர் நலப்பிரிவு, ஆய்வக மருத்துவ பரிசோதனையை துவக்கி வைத்தனர். வழக்கறிஞர் சங்க தலைவர் சுரேஷ், பொது செயலாளர் வெங்கடேசன் தலைமை வகித்தனர். நீதிபதிகள் ராஜசேகர், அருள்முருகன், பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், வடமலை சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் யாஸ்மின் பேகம், மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் சைலஜா ஒருங்கிணைத்தனர்.