உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிராம சபை புறக்கணிப்பு

கிராம சபை புறக்கணிப்பு

பேரையூர் : டி.கல்லுப்பட்டி ஒன்றியம் புளியம்பட்டியில் நேற்று நடக்க இருந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்தனர்.பொதுமக்கள் கூறியதாவது: கழிவு நீர் கால்வாய் அடைபட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சிறுவர்கள் காய்ச்சல், வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய நிர்வாகம் இதனை கண்டு கொள்ளாததால் கூட்டத்தை புறக்கணித்தோம் என்றனர்.ஊராட்சித் தலைவர் மணிகண்டன் கூறுகையில், ''40 ஆண்டுகளாக கழிவு நீர் கால்வாய் சென்ற பகுதி தற்போது தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற ஒன்றிய, மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை