உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நலத்திட்ட உதவி வழங்கல்

நலத்திட்ட உதவி வழங்கல்

திருப்பரங்குன்றம் : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இளைஞர் அணி செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசுகையில், ''தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கிய நலத்திட்டங்களுக்கு மூடுவிழா கண்டதுதான் தி.மு.க., அரசின் சாதனையாக உள்ளது. அம்மா மருந்தகங்களை முதல்வர் மருந்தகம் என மாற்றியுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஷூட் ஆட்சி நடத்துகிறார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை