| ADDED : மே 13, 2024 06:14 AM
மதுரை: ''கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க நீதிமன்றம் தடை நீக்கம் செய்ய வேண்டும்'' என தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.மதுரை அண்ணாநகரில் தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள்மதுரை நகர் கிளை சங்க ஆண்டுவிழா துணைத் தலைவர் மாதவன் தலைமையில் நடந்தது. செயலாளர் அபுதாஹீர் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் ரவிமோசஸ், பொருளாளர் சுப்ரமணி முன்னிலை வகித்தனர். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் நாகேஸ்வரன், அமைப்பு செயலாளர் யோகநாதன் பேசினர்.கூட்டத்தில் மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாத 'ஒயர்மேன்' லைசென்ஸ் வழங்கவும், அதற்கான வாய்மொழித் தேர்வு நடத்தவும், 5 ஆண்டுகள் ஹெல்பராக (உதவியாளர்கள்) அனுபவம் உள்ளவர்களுக்கு ஒயர்மேன் சான்றிதழ் வழங்க வேண்டும். மின்வாரியம் வர்த்தக நிறுவனங்களுக்கு மின் இணைப்பு வழங்க நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நலிவடைந்த உறுப்பினர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை, இறந்த உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு கட்டுமான வாரியம் மூலமாக ரூ.5 லட்சம் நிதி வழங்கப்பட்டது. ஆன்மிக சேவை செய்யும் 'விசிறி தாத்தா' நடராஜனுக்கு 'சேவைச் செம்மல்' விருது வழங்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் சதாம் உசேன் நன்றி கூறினார்.