உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கார் டயர் வெடித்து பெண் பலி; கணவர், மூவர் படுகாயம்

கார் டயர் வெடித்து பெண் பலி; கணவர், மூவர் படுகாயம்

திருச்சுழி : மதுரை திருநகரில் வசித்து வருபவர் ரமேஷ், 57, விருதுநகர் மாவட்ட வேளாண்மை விற்பனை பிரிவு இணை இயக்குனர். இவரது மனைவி மனைவி ஜெனுவா இவாஞ்சலின், 55, மதுரை அமெரிக்கன் கல்லுாரி ஏ.சி.ஆர்., மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை. நேற்று முன்தினம் இரவு, சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், நரிப்பையூருக்கு குடும்பத்துடன் சென்றனர்; நேற்று ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.மதியம் 2:30 மணிக்கு திருச்சுழி அருகே கமுதி விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்த போது, காரின் முன் டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ஜெனோவா இவாஞ்சலின் பலியானார்.இவருடன் காரில் பயணித்த கணவர் ரமேஷ், நரிப்பையூரைச் சேர்ந்த ஜோஷ்னா, 15, ராஜநாயகம், 65, மதுரையைச் சேர்ந்த மெர்சடைஸ் ரோட்டரிக்கல்ஸ், 28, ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள், நான்கு பேரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.எம்.ரெட்டியபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். தகவல் தெரிவிக்கப்பட்டும், 3 மணி நேரம் கழித்து வந்த அமரர் ஊர்தியில் பலியானவர் உடலை எடுத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை