மகளிர் தின விழா.,
மதுரை; மதுரை தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழக துணை மண்டல அலுவலகத்தில் மகளிர் தின விழா, இ.எஸ்.ஐ.சி.,யின் சிறப்பு சேவைக்கான வார நிறைவு விழா நடந்தது.மண்டல இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் சிவசக்தி பேசுகையில், ''போலீஸ் துறையில் மகளிரின் பங்கு முக்கியமானது.குழந்தைகள், பொதுமக்களின் பாதுகாப்பில் போலீசார் கவனத்துடன் செயல்படுகின்றனர்,'' என்றார்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.