உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அச்ச உணர்வுடன் பணியாற்றுகிறோம் அரசு ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

அச்ச உணர்வுடன் பணியாற்றுகிறோம் அரசு ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

மதுரை, : 'வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றாததால் அச்ச உணர்வுடன் பணியாற்றுகிறோம். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக' தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.மாநில தலைவர் அன்பரசு, பொதுச் செயலாளர் செல்வம் அறிக்கை: 20 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் வாழ்வாதார உரிமைக்காக போராடுகிறோம். முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளில் 86 சதவீதத்தை நிறைவேற்றியதாக அறிவித்தார். ஆனால் அரசு ஊழியர் வாழ்வாதார கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. ஆறுலட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. உள்ளாட்சி மன்றங்கள், மருத்துவம், பொதுத் துறைகளில் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிலஅளவை, பொதுப்பணி உட்பட பெரும்பாலான துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது. கருணை அடிப்படையிலான நியமனங்கள் 25 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர் குடும்பத்திற்கு உடனடி நிவாரணம் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.பணியிடங்களை நிரப்பாததால், அதிக பணிப்பளு, பணிநேரம் முடிந்தும், விடுமுறை நாளிலும் ஆய்வுக் கூட்டங்கள், சாத்தியமற்ற குறியீடுகளை திணிப்பது காரணமாக அரசு ஊழியர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதுபோன்ற பாதிப்புகளை களைய, புதிய பென்ஷன் திட்டம் ரத்து, 21 மாத அகவிலைப்படி, சரண்டர் உரிமைகளை வழங்க வேண்டும்.இதற்காக நாளை (ஜூலை 2) மாநிலம் முழுவதும் தாலுகா தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்னையில் நடந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ