உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் யோகா தின கொண்டாட்டம்

மதுரையில் யோகா தின கொண்டாட்டம்

மதுரை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதுரையில் பள்ளி, கல்லுாரி, அமைப்புகள் சார்பில் யோகா பயிற்சி வகுப்புகள் நடந்தன.

அமைப்புகள்

தனக்கன்குளம் யோகா நகர் சுவாமி சிவானந்தா யோகாசன ஆய்வு மையம் சார்பில் கப்பலுார் டோல்கேட் ஊழியர்களுக்கு யோகாசன பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு யோகாசன சங்க தலைவர் யோகி ராமலிங்கம் கூறுகையில், 'தமிழகத்தில் 3 லட்சம் பேர் ஒரே நேரத்தில் யோகாசன பயிற்சி செய்தனர்' என்றார். மதுரை தீஷா யோகா அறக்கட்டளை சார்பில் கே.கே.ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடந்த நிகழ்ச்சியில் உலக உருண்டையை வைத்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு ஆசனங்கள் செய்தனர். செயலாளர் கார்த்திக் ஏற்பாடுகள் செய்தார். பா.ஜ., திருப்பரங்குன்றம் நகர் மண்டல் சார்பில் தென்பரங்குன்றத்தில் மண்டல் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் யோகா செய்தனர்.நாகனாகுளம் நடையாளர் பூங்காவில் தேசிய நெடுஞ்சாலைத் துறை, கல்பதரு அமைப்பு சார்பில் நடையாளர்கள், மக்கள் பல்வேறு ஆசனங்களை செய்தனர். நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் கீர்த்தி பரத்வாஜ், ஒப்பந்ததாரர் அருள்ராஜா, கல்பதரு திட்ட மேலாளர் சதீஷ், பயிற்சியாளர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர் மூகாம்பிகை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நகர் பா.ஜ., சார்பில் சேதுபதி பள்ளியில் தலைவர் மகா சுசீந்திரன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் முன்னிலை வகித்தார். மாவட்ட பார்வையாளர் கார்த்திக்பிரபு, பொதுச் செயலாளர் சந்தோஷ் சுப்ரமணியன், கருடகிருஷ்ணன், பொருளாளர் நவீன், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு வேல்முருகன், நிர்வாகிகள் கண்ணன், மீனாட்சி, மண்டல் தலைவர் முரளி, ஊடகப்பிரிவு தலைவர் வேல்பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.காந்தி மியூசியத்தில் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் தலைமை வகித்தார். வங்கி முதன்மை அதிகாரிகள் ரஞ்சித், அண்ணாமலை பயிற்சியை தொடங்கி வைத்தனர். யோகா ஆசிரியர்கள் பழனிக்குமார், மணிமாறன், நந்தினி, லோகபிரியா பயிற்சி அளித்தனர். இரண்டு மாத கோடைகால யோகா பயிற்சி முடித்தவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவர் நாகராணி நாச்சியார் சான்றிதழ் வழங்கினார். மியூசிய பொருளாளர் செந்தில்குமார், காப்பாட்சியர் நடராஜன், வங்கி கிளை மேலாளர் கோகுல் கிருஷ்ணன், விக்ரம் மருத்துவமனை நிறுவனர் நாராயணசாமி, எத்தியோப்பியா பேராசிரியர் சேனாபதி, ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை செயலாளர் நந்தாராவ் செய்திருந்தார்.

பள்ளி, கல்லுாரி

மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் முதல்வர் சுஜாதா தலைமை வகித்தார். துணை முதல்வர் குருபாஸ்கர், டீன் பிரியா முன்னிலை வகித்தனர். பயிற்சியாளர் ராமலிங்கம் யோகா தினத்தின் முக்கியத்துவம், நன்மை குறித்து பேசினார். உடற்கல்வி இயக்குநர் பாண்டியராஜன், மொழியியல் துறைப் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரியில் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் சகாதேவன் பயிற்சி அளித்தார். முதல்வர் ஆனந்தன், துணை முதல்வர் சகாதேவன் மாணவர்களுக்கு விளக்கினர். என்.எஸ்.எஸ்., அலுவலர் சிவக்குமார் ஏற்பாடுகளை செய்தார். சோழவந்தான் நகரி கல்வி சர்வதேச பொதுப்பள்ளியில் (சி.பி.எஸ்.இ.,) டி.எஸ்.பி., இலக்கியா முன்னிலை வகித்தார். யோகா பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் பேசினார். முதல்வர் அருணா வரவேற்றார். துணை முதல்வர் அபிராமி, முதல்வர் டயானா, நிர்வாக இயக்குநர் பிரேமலதா தலைமை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் சுபா, ரெஹானா பேகம், உதயா ஒருங்கிணைத்தனர். மாணவர் சுதிப் சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மதுரை ராயல் வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சூரியநமஸ்காரம் செய்தனர்.மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி நாட்டுநலப் பணித்திட்டம், தேசிய மாணவர் படை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு செயலாளர் விஜயராகவன் தலைமை வகித்தார். முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குநர் பிரபு பங்கேற்றனர். காந்தி மியூசிய யோகா பயிற்சியாளர் பிரேமலதா ஆசனங்களை பயிற்றுவித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சிலம்பரசன், வெங்கடேஷ்பாரதி, தேசிய மாணவர் படை அலுவலர் சுரேஷ்பாபு ஒருங்கிணைத்தனர்.சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். முதல்வர் பொன்னி முன்னிலை வகித்தார். யோகாவின் பயன்கள், முக்கியத்துவம் குறித்து வினிதா பேசினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் மேகலா விழா ஏற்பாடுகள் செய்தார். சரஸ்வதி நாராயணன் கல்லுாரி யோகா மையம், உன்னத் பாரத் அபியான், என்.எஸ்.எஸ்., சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். யோகா மைய ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி வரவேற்றார். அருள்பெருஞ்ஜோதி யோகா நல்வாழ்வு ஆராய்ச்சி மையம் தலைவர் பாண்டியராஜா பயிற்சி அளித்தார். பேராசிரியர் விஜயகுமார் நன்றி கூறினார். என்.எஸ்.எஸ்., அலுவலர்கள் ராமகிருஷ்ணன், இருளப்பன், தமீம் அசாருதீன் முகாம் ஏற்பாடுகள் செய்தனர்.நாகமலைபுதுக்கோட்டை எஸ்.பி.ஓ.ஏ., பள்ளிகளில் நடந்த விழாவில் மாணவி வெங்கடலட்சுமி வரவேற்றார். பயிற்சியாளர் பாண்டியராஜா யோகா அவசியம், நன்மைகள் குறித்து விளக்கினார். பயிற்சி அளித்தார். முதல்வர் லதா, தலைமையாசிரியை அனிதா கரோலின், உதவி தலைமையாசிரியை பொற்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.மதுரை எல்.கே.பி., நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சுகுமாறன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ராஜவடிவேல் வரவேற்றார். பயிற்சியாளர்கள் கவுஸ்பாட்ஷா, மீனாட்சி, சாந்தி, ஜெயப்பிரியா, செந்தில் பயிற்சி அளித்தனர். ஆசிரியைகள் அனுசியா, விஜயலட்சுமி, மனோன்மணி, சித்ரா, அகிலா, அம்பிகா, சாந்தி பங்கேற்றனர். மாணவி பைரோஸ்பானு நன்றி கூறினார்.மதுரை சேதுபதி மேனிலைப் பள்ளியில் சுபேதார் முருகன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட என்.சி.சி., மாணவர்கள், தலைமையாசிரியர் நாராயணன், என்.சி.சி., அதிகாரி பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பதஞ்சலி யோகா பயிற்றுநர்கள் மேகா,ஆகாஷ் பயிற்சி அளித்தனர். லேடி டோக் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., மாணவிகள் முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ தலைமையில் பங்கேற்றனர். உடற்கல்வி இயக்குநர்கள் சாந்தமீனா, ஹேமலதா ஒருங்கிணைத்தனர். மகாத்மா காந்தி யோகா நிறுவனம் நிறுவனர் ரவிச்சந்திரன் யோகாவின் நன்மைகள் குறித்து விளக்கினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் மகாலட்சுமி, தனலட்சுமி, அருணா, சிவகாமி, கோப்பெருந்தேவி, அனிதா, சுஜாதா ஏற்பாடு செய்தனர்.சோலைமலை பொறியியல் கல்லுாரியில் பேராசிரியர் நாகராஜன் வரவேற்றார். என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் பால்சாமி முன்னிலை வகித்தார். காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன் யோகா, தியானம், முழுமை நலவாழ்வு குறித்து பயிற்சி அளித்தார். இணை பேராசிரியைகள் கார்த்தியாயினி, ஜனனி ஏற்பாடுகளை செய்தனர்.

உசிலம்பட்டி-

எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். பெருமாள், விஜயகுமார், பிரபு பயிற்சி அளித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பக்ருதீன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் சேகர்சிவகுரு, ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர்கள் சிவக்குமார், விக்னேஸ்வரன், என்.எஸ்.எஸ்., அலுவலர் ராமகிருஷ்ணன், என்.சி.சி., அலுவலர் செந்தில்குமார் ஒருங்கிணைத்தனர்.செல்லம்பட்டி அருகே கு.நாட்டாபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் சின்னசாமி தலைமையில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் இளமாறன், ஆசிரியர்கள் பசும்பொன், இளங்கோ ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை