உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 10ம் வகுப்பு மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

10ம் வகுப்பு மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மதுரை:மதுரையில், 10ம் வகுப்பு மாணவர் பயிற்சி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை சம்பக்குளத்தை சேர்ந்தவர் வடிவேல். தனியார் வங்கி அதிகாரி. இவரது, 15 வயது மகன் மேலுார் தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்துக் கொண்டே, துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் சேர்ந்து அதற்கான பயிற்சி பெற்று வந்தார். சில நாட்களாக, பெற்றோர் உட்பட யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். நேற்று காலை, சிவகங்கையில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு பெற்றோர் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்தவர் துப்பாக்கியால் தன்னைத்தானே நெற்றியில் சுட்டு, தற்கொலை செய்து கொண்டார். மாலை வீடு திரும்பிய பெற்றோர், மகன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் குறித்து புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ