உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 11 மருத்துவக்கல்லுாரிகள் உதயகுமார் பெருமிதம்

11 மருத்துவக்கல்லுாரிகள் உதயகுமார் பெருமிதம்

திருப்பரங்குன்றம்- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறியதாவது: தென் மாவட்ட மக்களின் மருத்துவ தேவையை நிறைவு செய்ய ஜெ.,வின் கனவு எய்ம்ஸ் மருத்துவமனை. அதை முதல்வராக இருந்த பழனிசாமி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கொண்டு வந்தார்.இதற்கான அறிவிப்பு மத்திய அரசு வெளியிட்டவுடன் 250 ஏக்கர் நிலங்களை மாநில அரசு மத்திய அரசிடம் கொடுத்தது. ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கொரோனாவால் காலதாமதமானது. தற்போது துவக்கப்பட்டுள்ளது. முதல்வராக இருந்த பழனிசாமி 11 மருத்துவக் கல்லுாரிகளை தமிழகத்திற்கு பெற்று தந்தார். இதற்கு சிகரம்வைத்தாற் போல் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ