உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மறியல் செய்த அங்கன்வாடி ஊழியர்கள் 1340 பேர் கைது

 மறியல் செய்த அங்கன்வாடி ஊழியர்கள் 1340 பேர் கைது

மதுரை: மதுரையில் மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 1340 பேரை போலீசார் கைது செய்தனர். முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வரும்முன் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியர் ஆக்குவேன் என கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று மறியலில் பங்கேற்றனர். மதுரையில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். செயலாளர் வரதலட்சுமி கோரிக்கை குறித்து விளக்கினார். பொருளாளர் ரமேஷ்வரி, சி.ஐ.டி.யூ., மாநில செயலாளர் தேவராஜ், மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்று பேசினர். அண்ணா பஸ்ஸ்டாண்ட் அருகே நடந்த போராட்டத்தில் 1340 பேரை போலீசார் கைது செய்து, புதுார், சூரியாநகர் பகுதிகளில் 3 மண்டபங்களில் அடைத்து வைத்து, மாலையில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை