உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 17 கிலோ கஞ்சா ரயிலில் பறிமுதல்

17 கிலோ கஞ்சா ரயிலில் பறிமுதல்

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் நேற்று17 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.ரோந்துப்பணியில் ஈடுபட்ட ரயில்வே போலீசார்,அதிகாலை 1:15 மணிக்கு மதுரை வந்த புருலியா - திருநெல்வேலி ரயிலில் (22605) சோதனையிட்டனர். அதன் பொதுப் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த 2பைகளில் 17 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிந்தது. அவற்றைபறிமுதல் செய்து மாவட்டபோதைப் பொருள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜாங்கத்திடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை