மேலும் செய்திகள்
முற்றுகை போராட்டம்; மாற்றுத்திறனாளிகள் கைது
1 hour(s) ago
மதுரை: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய செயல் தலைவர் நம்புராஜன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மதிபாரதி, பொறுப்பு செயலாளர் குமரவேல், மாவட்ட செயலாளர் பாலமுருகன் உட்பட பலர் பேசினர். மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. சுயதொழில் துவங்கவும் உதவியில்லை. இதனால் மாநில அரசு வழங்கும் உதவித்தொகையே இவர்களின் நிதிஆதாரம். 75 சதவீதத்திற்கு கீழ் ஊனமுற்றோருக்கு ரூ.1500, அதற்கு மேல் ஊனமுற்றோருக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவு. எனவே கூடுதலாக வழங்க வேண்டும் என்றனர். கலெக்டர் அலுவலகம் முன்பு 186 பேரை போலீசார் கைது செய்தனர். * உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் மாவட்ட நிர்வாகிகள் முருகன், ராஜேஸ்வரி, ஒன்றிய நிர்வாகிகள் நாகராஜ், சின்னச்சாமி, பழனியம்மாள், மார்க்சிஸ்ட் கட்சியினர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 80 பெண்கள் உள்ளிட்ட 210 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 hour(s) ago