உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் முதல்வரின் ரோடு ஷோ நிகழ்ச்சியால் 2 நாள் உற்சாகம்: ஆறு தொகுதிகளில் மக்களை கவர ஆஹா ஏற்பாடு

மதுரையில் முதல்வரின் ரோடு ஷோ நிகழ்ச்சியால் 2 நாள் உற்சாகம்: ஆறு தொகுதிகளில் மக்களை கவர ஆஹா ஏற்பாடு

மதுரை: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் வருகையின்போது மே 31, ஜூன் 1ல் அவரது ரோடு ஷோ நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முதல்வர் தலைமையில் தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 1ல் உத்தங்குடியில் நடக்கிறது. இதற்காக மே 31ல் விமானம் மூலம் மதுரை வரும் முதல்வர், வில்லாபுரம், ஹவுசிங் போர்டு, ஜெய்ஹிந்துபுரம், சோலையழகுபுரம், ஜீவா நகர், சுந்தரராஜபுரம், டி.வி.எஸ்., பாலம், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம் சிக்னல், ஆரப்பாளையம் கிராஸ் ரோடு வழியாக சென்று முன்னாள் மேயர் முத்து வெண்கல சிலையை திறந்து வைக்கிறார்.முன்னதாக ரோடு ஷோவின் போது ஜெய்ஹிந்துபுரம் வீரமாகாளியம்மன் கோயில் வாசல் முன் அமைச்சர் மூர்த்தி சார்பில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட நிரந்தர மெகா பந்தலை திறந்து வைக்கிறார். டி.வி.எஸ்., நகர் பாலம் ஜெய்ஹிந்த்புரம் பிரிவு பகுதியை திறந்து வைக்கிறார்.அன்றிரவு அழகர்கோவில் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் ஓய்வு எடுக்கிறார். மறுநாள் காலை ஓட்டலில் இருந்து கிளம்பும் போதும் ரோடு ஷோ நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாட்டுத்தாவணி ஆர்ச் முதல் பொதுக் குழு நடக்கும் உத்தங்குடி வரை அமைச்சர் மூர்த்தி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் தளபதி, மணிமாறன் ஆகியோர் செய்துள்ளனர். ரோட்டின் இருபுறமும் மக்கள் திரண்டு வரவேற்கின்றனர்.இரண்டு நாள் ரோடு ஷோ நிகழ்ச்சியிலும் மதுரை தெற்கு, மத்தி, மேற்கு, திருப்பரங்குன்றம், வடக்கு, கிழக்கு என 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள மக்களை சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Subramanian N
மே 27, 2025 12:26

இவர் ஒரு காப்பி அடிக்கும் முதல்வர். மோடி அவர்கள் ரோடு ஷோ நடத்துகிறார் என்பதற்காக ஷோ நடத்தும் இவருக்கு சுய புத்தி இல்லை என்று நினைக்கிறேன். மோடி திட்டத்துக்கு எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டுவதுபோல் இதற்கும் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்


Kalyanaraman
மே 27, 2025 08:14

இந்த ரோடு ஷோ ல கூட பிஜேபிய தான் காப்பி அடிக்கிறாங்க. மோடிஜியை மட்டுமே வைத்து தேர்தல் காலங்களில் இந்தியா முழுக்க ரோடு ஷோ நடத்தப்பட்டு வருகிறது. திமுக தமிழ் தமிழ் என்று கூவுகிறார்களே இதற்கு தமிழில் பெயர் வைத்தால் என்ன?


Mani . V
மே 27, 2025 04:55

அவர் கடந்த நான்கு வருடங்களாக ரோடு ஷோ மட்டும்தான் நடத்துகிறார் என்று அனைவருக்கும் தெரியுமே.


venugopal s
மே 27, 2025 16:37

குஜராத்தில் ரோடு ஷோ நடத்தும் பிரதமர் மோடி அவர்களைச் சொல்கிறீர்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை