கண்மாயில் மூழ்கி 2 சிறுமியர் பலி
மதுரை:வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் அன்னலட்சுமி 12. ஏழாம் வகுப்பு படித்தார். கோடை விடுமுறைக்காக அழகர்கோவில் அருகேயுள்ள சுந்தரராஜன்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கினார். நேற்று மதியம் அவரும், அதே ஊரைச் சேர்ந்த 8ம் வகுப்பு படித்த முத்துப்பாண்டி மகள் பிரியாவும் 14, அங்குள்ள செட்டி கண்மாயில் குளித்தபோது மூழ்கி இறந்தனர். அப்பன்திருப்பதி போலீசார் விசாரிக்கின்றனர்.