உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 25 ஏக்கர் வாழை, 5 ஏக்கர் வெற்றிலை கொடிகள் சேதம்

25 ஏக்கர் வாழை, 5 ஏக்கர் வெற்றிலை கொடிகள் சேதம்

மதுரை: மதுரையில் ஆக. 23, 24ல் பெய்த மழையால் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் சேதமடைந்த வாழை, வெற்றிலை தோட்டங்களை கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாந்தி, தோட்டக்கலை துணை இயக்குநர் பிரபா, உதவி இயக்குநர் திவ்யா ஆய்வு செய்தனர். பிரபா கூறியதாவது: துவரிமானில் 30 விவசாயிகளின் 25 ஏக்கர் வாழைத்தோட்டங்கள் மழை, காற்றால் முறிந்தும், வேரொடு பெயர்ந்தும் சேதமாகின. 7 விவசாயிகளின் 5 ஏக்கர் வெற்றிலைக் கொடிக்கால்களும் சேதமடைந்தன. அச்சம்பத்து, விளாச்சேரி பகுதியில் 7 விவசாயிகளின் 2.5 ஏக்கர் வாழைத்தோட்டம் சேதமடைந்தது. இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை