உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்து கோயிலில் மூன்றே நாட்களில் 250 திருமணங்கள்: நகரில் நெரிசலோ நெரிசல்

குன்றத்து கோயிலில் மூன்றே நாட்களில் 250 திருமணங்கள்: நகரில் நெரிசலோ நெரிசல்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முகூர்த்த நாட்களில் பதிவுத் திருமணங்கள், பரிகார திருமணங்கள், மண்டபங்களில் பதிவின்றி நுாற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும். ஆவணி மாத முகூர்த்த நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் கோயிலில் திருமணம் செய்கின்றனர். ஆக.27ல் 64 திருமணங்கள், ஆக.28ல் 54 திருமணங்கள், ஆக.29ல் 20 பதிவு பெற்ற திருமணங்கள் நடந்தன. தவிர கோயில் மண்டபங்களில் பதிவில்லாத, பரிகார திருமணங்கள் 200க்கும் மேல் நடந்துள்ளன. இக்கூட்டதால் 3 நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்குள் 2 மணி நேரம் காத்திருந்தனர். ஊருக்குள் அனைத்து மண்டபங்களிலும் திருமணங்கள் நடந்தன. சரவணப் பொய்கை செல்லும் வழியிலும், ஜி.எஸ்.டி., ரோடு தெப்பக்குளத்து கரையிலும் வாகன காப்பகங்கள் உள்ளன. வாகனங்களை காப்பகங்களுக்கு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினாலும் திருமண விழாவுக்கு வந்த வாகனங்கள் ரத வீதிகள், ஜி.எஸ்.டி., மெயின் ரோடு பகுதியில் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். இரண்டு மேம்பாலங்களுக்கும் இடைப்பட்ட ரோடு, அந்த ரோட்டில் உள்ள திருமண மண்டபங்கள் முன்பு வாகனங்களை நிறுத்தியதால் நெரிசல் ஏற்பட்டு திருநகர், திருமங்கலம், பெரியார் பஸ்ஸ்டாண்ட் செல்லும் பஸ்களின் போக்குவரத்தும் பாதித்தது. இந்த மெயின் ரோட்டின் அகலம் குறைவு, நடுவில் உள்ள பஸ்ஸ்டாப் சந்திப்பு ரோடாக இருப்பது போன்ற காரணத்தால் திருமண, பவுர்ணமி நாட்களில் நெரிசல் அதிகம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி