திருமங்கலம் விபத்தில் பலி 3 மறியல் முயற்சி
திருமங்கலம் : திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் உள்ள ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. தடையை மீறி இப்பகுதியில் சென்ற கனரக வாகனங்களால் 3 பேர் பலியாயினர். இதை கண்டித்து நேற்று கற்பக நகர், காமராஜபுரம் பகுதி மக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை தாசில்தார் மனேஷ்குமார், இன்ஸ்பெக்டர் லட்சுமி லதா, எஸ்.ஐ., ஜெயக்குமார் உள்ளிட்டோர் சமரசம் செய்தனர்.