குழந்தைகள் நல வார்டுக்கு கூடுதலாக 3 தளங்கள்
மதுரை: மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி அருகே புதிதாககட்டப்பட்டு வரும் குழந்தைகள் நலப்பிரிவுக்கு கூடுதலாக 3 தளங்கள் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.புதிய கட்டடம் தரைத்தளத்துடன் கூடிய 2 தளங்களாக ரூ.20 கோடி மதிப்பில் 12 ஆயிரம் சதுரடியில் கட்டப்பட்டு வருகிறது. 95 சதவீத கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. தற்போது செயல்பட்டு வரும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடம் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் 20ஆயிரம் சதுரடியில் 250க்கு மேற்பட்ட படுக்கைகளுடன் செயல்படுகிறது. எனவே கட்டுமானம் முடிந்தாலும்இடநெருக்கடி காரணமாக புதிய இடத்திற்கு குழந்தைகள் நலப்பிரிவை மாற்ற முடியாத சூழல் உள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் ஜன. 25ல் செய்தி வெளியானது.இந்நிலையில் கூடுதலாக 3 பிரிவு தளங்களுக்கான திட்ட மதிப்பீட்டை தயார் செய்யுமாறு பொதுப்பணித்துறைக்கு தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் கடந்த வாரம் உத்தரவிடப்பட்டது. ரூ.20 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ள நிலையில் விரைவில் கூடுதலாக 3 தளங்கள் கட்ட வாய்ப்புள்ளது.