உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  அழகர்கோவிலில் கார்த்திகை தீப உற்ஸவம்: டிச.4 ல் 300 லிட்., நெய்தீபம்

 அழகர்கோவிலில் கார்த்திகை தீப உற்ஸவம்: டிச.4 ல் 300 லிட்., நெய்தீபம்

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் கார்த்திகை தீப உற்ஸவத்தை முன்னிட்டு, டிச. 4 பவுர்ணமி அன்று காலை சுந்தரராஜ பெருமாளுக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடக்கிறது. பெரிய தோளுக்கினியானில் பெருமாளை எழுந்தருளச் செய்து திருமடப்பள்ளி நாச்சியாருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 7:02 மணிக்கு மேல் 7:35 மணிக்குள் பெருமாள், விஷ்வக்சேனர், சேத்திரபாலகர், கருடன், தாயார், சக்கரத்தாழ்வார், நரசிம்மர், ஆண்டாள், சரஸ்வதி, கம்பத்தடி சன்னதிகளில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது. பின் பிரகாரத்தில் எழுந்தருளும் பெருமாள், ஆழ்வார் சன்னதியில் தீர்த்தம், சடாரி, கோஷ்டி நடந்து குடைவரை வழியாக உறியடி மண்டபம் மேல் புறம் பார்சட்டத்தில் எழுந்தருள்கிறார். பின் புண்ணியாகவாசனம், புரோக் ஷணை பூஜைகள் நடந்தப்பட்டு சொக்கப்பனை கொளுத்தி தீப உற்ஸவம் நடக்கிறது. அழகர்மலை உச்சியில் உள்ள வெள்ளிமலையாண்டி கோயில் கோம்பை கொப்பரையில் இரவு 7:02 மணிக்கு மேல் 300 லிட்., நெய் ஊற்றி தீபம் ஏற்றப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி