உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / "அ.தி.மு.க.,வின் தோல்விக்கு காரணம் இது தான்": அடித்து சொல்கிறார் மதுரை ஆதீனம்

"அ.தி.மு.க.,வின் தோல்விக்கு காரணம் இது தான்": அடித்து சொல்கிறார் மதுரை ஆதீனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்காததால் தான் அ.தி.மு.க., தோல்வியை தழுவியது' என மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களே கொன்று குவிக்க காரணமானவர்களும் வெற்றி பெற்று விட்டார்களே என மன வருத்தம் உள்ளது. வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இரண்டு கோரிக்கைகளை முன் வைக்கிறேன். இந்திரா தாரை வார்த்து கொடுத்த கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y341k937&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மோடிக்கு எதையும் தாங்கும் இதயம்

இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பாதுகாக்க பிரதமர் மோடி தமிழ் ஈழத்தை ஏற்படுத்த வேண்டும். பிரதமர் மோடி எதையும் தாங்கும் இதயம் கொண்டவர். பா.ஜ., பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்து இருந்தால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பட்டனை அழுத்தியவுடன் பா.ஜ.,வுக்கு ஓட்டு விழுகிறது என கூறியிருப்பார்கள். ஜனநாயக நாட்டில் வெற்றி அல்லது தோல்வி என்பது மக்கள் கொடுக்கக்கூடிய தீர்ப்பாகும்.

அ.தி.மு.க., தோல்வி

லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்காததால் தான் அ.தி.மு.க., தோல்வியை தழுவியது. பிரதமர் மோடி எல்லா மதங்களையும் ஆதரிக்கிறார். ஆகவே அவரை நான் ஆதரிக்கிறேன். பா.ஜ.,விற்காக நான் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டதில்லை. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நான் ஆதரவு கொடுப்பேன். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, எத்தனை முறை ஆட்சி கலைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

A1Suresh
ஜூன் 12, 2024 11:54

சிலருக்கு விளம்பரபித்து கிடந்து ஆட்டுகிறது. என்ன செய்வது ?


SARAVANAN A
ஜூன் 11, 2024 18:33

ஆதீனங்கள் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளை ஆதரிக்கின்றனவா அல்லது எதிர்கின்றனவா என்பதெல்லாம் பெருட்டல்ல அவர்களின் முக்கிய பணி என்ன? அவர்கள் சார்ந்த இந்து மதத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை களைந்திடவும், வறுமை, அறியாமை இவற்றால் நிகழும் கட்டாய மத மாற்றங்களை தடுத்து நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி டவும், விளம்பு நிலை மக்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றவும், இன்னும் இதுபோன்ற எத்தனையோ தூய்மை பணிகள் காத்து கொண்டிருக்கின்றன. முதலில் இவரை போன்றவர்கள் மடங்களை விட்டு வெளியே வந்து மக்களின் மடத்தனங்களை களைந்து இந்து மதம் செழித்தோங்க தம்மை அர்ப்பணிக்க முயல வேண்டும்.


திண்டுக்கல் சரவணன்
ஜூன் 11, 2024 14:24

ஜாமாத் - சர்ச் எல்லாம் அரசியல் செய்யும்போது ஆதீனங்கள் அரசியல் பேசலாம். பேச வேண்டும். அப்போது தான் ஹிந்துக்கள் ஜாதியில் இருந்து வெளியே வந்து மதத்தால் ஒன்றிணைவார்கள்.


Ramesh Sundram
ஜூன் 11, 2024 12:50

இவர் ஆன்மீக வேலையை மட்டும் பார்க்கட்டும் அரசியல் கூட்டணி பற்றி பேச இவரது வேலை இல்லை


Sivak
ஜூன் 11, 2024 13:28

இந்து மத ஆன்மீக குருக்கள் இனிமே இதெல்லாம் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது


M.Malini
ஜூன் 11, 2024 11:00

ஆன்மிகவாதிகள் தர்மத்தை பின்பற்றுவார்கள். சரித்திரத்தை புரட்டி பாருங்கள். அரசர்களுக்கு ராஜ குருவாக ஆன்மிக வாதிகளே இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய ஆலோசனைகள் நாட்டு மக்களின் நலன் கருதியே இருக்கும்.


K r Madheshwaran
ஜூன் 11, 2024 07:33

ஆதீனங்கள் அரசியல் செய்யக்கூடாது என்பது மடமை அவர்கள் இந்துமத தலைவர்கள் அவர்கள் வழிநடத்தலாம் அவர்களுக்கு அதற்க்கான தகுதி உள்ளது மக்களை வழிநடத்த சரியானவர்கள்


BASHEER AHAMED
ஜூன் 11, 2024 07:55

பிரதமரே தன்னை கடவுள் என்று சொல்லும் போது ஆதினம் ஏன் அரசியல் செய்யக்கூடாது


M.Malini
ஜூன் 11, 2024 11:02

மிகவும் சரி


லோகநாதன்
ஜூன் 10, 2024 20:59

ஆதீனங்கள் அரசியல் பேச ஆரம்பிச்சுட்டாங்க...


Vasoodhevun KK
ஜூன் 10, 2024 21:23

ஜமாத்ல இன்ன கட்சிக்கு தான் ஓட்டு போடனும்னு அறிவிப்பது அரசியல் இல்லை .நம்புங்க. நடுநிலை போர்வையில் கோடாரிகள்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 10, 2024 20:37

வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லா" என்று தான் கூறப்பட்டுள்ளது. மதமும் அரசியலும் எப்பொழுதும் சேர்ந்து இருக்க வேண்டும். இதைத்தான் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் கடைபிடிக்கின்றனர். அவர்கள் செய்தால் யாரும் எதிர்ப்பதில்லை. ஆனால் இந்து சாமியார்கள் மற்றும் இந்து மதப் பற்றுள்ளோர் பேசினால் மட்டும் மட்டம் தட்ட எத்துணை பேர் வருகிறார்கள்.


ஜூன் 10, 2024 20:11

மதுரை ஆதீனம் முதலில் தனது மடத்தின் சார்பில் மீண்டும் மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தை எடுத்து நடத்த வேண்டும்.. திருமுறைகளை நன்கு ஓதி மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும்.. அரசியல் செய்ய தேவை இல்லை . நமது வேலை அது இல்லை ஆதீனம் அவர்களே..


vaiko
ஜூன் 10, 2024 20:08

பஞ்சாப் வீர மங்கை குல்விந்தர் கவுர் மதுரை வந்து இவரை சந்திக்க வேண்டும். சோத்தால் அடித்த பிண்டங்களா தமிழர்களை நம்பி பிரயோசனம் இல்லை.


Venkatesh
ஜூன் 10, 2024 21:22

பேரே கேவலமா இருக்கே.... சைக்கோ.... விளம்பரம் தேடி அறைஞ்சவள கூப்பிட்டு, போகச்சொல்லி புடிச்சு கூடி.... அதே துணிச்சல் பெற்று சேவை செய்யவும்


சமீபத்திய செய்தி