உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 450 ஆடுகளை வெட்டி அன்னதானம்

450 ஆடுகளை வெட்டி அன்னதானம்

அவனியாபுரம்: மதுரை வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோயிலில் 38வது ஆண்டு திருவிழா நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடக்கும். பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆடுகள் வழங்குவர். அதை பலியிட்டு சுவாமிக்கு படைத்து சமைத்து காலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவர். இந்த ஆண்டு நேற்று முன்தினம் ஆட்டுக்கிடாய்களுடன் பொங்கல் பானை ஊர்வலம் நடந்தது. இரவு 12:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. கோயில் முன்பு 450 ஆடுகள் வெட்டப்பட்டு, 10 ஆயிரம் கிலோ அரிசியை நுாற்றுக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் சமைத்தனர். சுவாமிக்கு பூஜை முடிந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்