உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிட்கோவில் 4வது மியாவாக்கி காடுகள்

சிட்கோவில் 4வது மியாவாக்கி காடுகள்

திருமங்கலம்: கப்பலுார் சிட்கோ தொழிற்பேட்டையில் சுற்றுச்சூழல் மாசுப்படுவதை தடுக்க மியாவாக்கி அடர்வன காடுகள் திட்டம் சில ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 3 கட்டங்களாக 6.5 ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. 4வது கட்டமாக 2.5 ஏக்கர் பரப்பளவில் நேற்று இத்திட்டத்தை அரசின் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறைச் செயலர் அதுல் ஆனந்த் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். சிட்கோ தொழிலதிபர்கள் சங்கத் தலைவர் ரகுநாத ராஜா, முன்னாள் தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் ராமசாமி, செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ