மஞ்சுவிரட்டில் 9 பேர் காயம்
அலங்காநல்லுார்: பாசிங்காபுரத்தில் வெள்ளை காளை மற்றும் குமாரம் மாடுபிடி வீரர் வினோத் நினைவாக, அலங்காநல்லுார் போட்டோகிராபி நண்பர்கள் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், இளைஞர் பேரவை ராமமூர்த்தி, தொழிலதிபர் ஆதித்ய சேதுபதி, வீரதமிழர் வடமாடு நலச் சங்கத்தினர், வாடிப்பட்டி ஜல்லிக்கட்டு குழு வினோத், ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர். வடத்தில் பூட்டிய ஒரு காளைக்கு 20 நிமிடம், அதனை அடக்க 9 வீரர்கள் களம் இறங்கினர். காளை பிடிபட்டால் காளையர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. பங்கேற்ற 22 காளைகளுக்கும் மரியாதை செய்யப்பட்டது. போட்டியின் போது 9 வீரர்கள் காயமடைந்தனர்.