மேலும் செய்திகள்
சேதமான சமுதாயக் கூடம்
10-Jul-2025
வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே கட்டக்குளத்தில் ஊராட்சி அலுவலகம், சேவை மையம், சமுதாயக்கூடம் பராமரிப்பின்றி பாழடைந்து வருவதாக கிராமத்தினர் வேதனை தெரிவித்தனர். அப்பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி கூறியதாவது: இங்கு ஊராட்சி அலுவலகம், சேவை மையம், சமுதாயக்கூடம் அருகருகே அமைந்துள்ளன. இப்பகுதிகளில் ஏராளமான செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், நடந்து செல்லக் கூட வழியின்றி காடு போன்று காட்சியளிக்கிறது. சமுதாயக் கூடம் கட்டி 10 ஆண்டுகளாகிறது. கதவுகள், ஜன்னல்கள் துருப்பிடித்து வலுவிழந்துள்ளன. ஜன்னல் கதவுகள் உடைந்து, விழும் நிலையில் உள்ளது. சேவை மைய கட்டடம் மராமத்து செய்து பயன்படுத்த முடியாமல் செடி, கொடிகளால் சூழப்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இதனை சீரமைக்க வேண்டும் என்றார்.
10-Jul-2025