உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குழந்தையின்மை ஒரு பார்வை

குழந்தையின்மை ஒரு பார்வை

குழந்தையின்மை என்பது, 'ஒரு தம்பதி குறைந்தது ஓராண்டு பாதுகாப்பில்லா பாலுறவில் ஈடுபட்டும் குழந்தையை பெற முடியாத நிலை' ஆகும். இது பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரிலும் ஏற்படக்கூடியது.

குழந்தையின்மை காரணங்கள்

பெண்களில் பல்லுறைகள் (PCOD / PCOS), முட்டை வளர்ச்சி குறைபாடு, கருப்பை குழாய் அடைப்பு, எண்டோமெட்ரியோசிஸ் எனப்படும் ஹார்மோன் கோளாறு காரணமாக உள்ளது.ஆண்களில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு, விந்தணுக்களின் இயக்கம் குறைவு, ஹார்மோன் சிக்கல்கள், நீண்ட நேரம் புகைபிடித்தல், மதுபானம் பயன்படுத்துதல் போன்றவை காரணமாக உள்ளது.இவற்றை கண்டறியும் பரிசோதனைகளாக USG (முதுகுவழி அல்ட்ராசவுண்ட்), ஹார்மோன் சோதனைகள், ஹைஸ்டிரோசால் பிஞ்ஜோகிராம் (HSG - குழாய் திறப்பை காண), விந்தணு பரிசோதனை, லேபரோஸ்கோபி (Laparoscopy - குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு) போன்றவை உள்ளன.குழந்தையின்மைக்கான சிகிச்சை முறைகளாக மருந்து மூலம் ஒவுலேஷன் துாண்டுதல், விந்தணுவை நேரடியாக கருப்பைக்கு செலுத்துதல், IVF எனப்படும் வெளியில் முட்டையையும், விந்தணுவையும் சேர்த்து வளர்த்த பின்னர், கருப்பையில் வைத்து வளர்க்கும் முறை, லேபரோஸ்கோபிக் சிகிச்சைகள் - PCOD துளை செய்வது, குழாய் திறப்பது போன்ற சிகிச்சை முறைகள் உள்ளன.வாழ்க்கைமுறை மாற்றங்களை செய்வது அவசியம். உடல் எடையை கட்டுப்படுத்துவது, ஒழுங்கான உணவு மற்றும் உடற்பயிற்சி செய்தல், மனஅழுத்தத்தை குறைத்தல், புகைபிடித்தல், மதுபானம் தவிர்ப்பு போன்றவற்றை கடைபிடிப்பது முக்கியம்.இன்றைய மருத்துவம் வளர்ந்திருப்பதால் குழந்தையின்மை ஒரு தீர்க்கமுடியாத பிரச்சினை அல்ல. சரியான பரிசோதனைகள், சிகிச்சை மூலம் பல தம்பதியர் பெற்றோராக மாறியுள்ளனர்.. தேவையான சமயத்தில் மருத்துவரை அணுகுவது முக்கியம்.--- டாக்டர் சரவணன்மதுரை 0452 - 244 6000


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ