உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கீழடி அகழாய்வு ஒரு பார்வை

கீழடி அகழாய்வு ஒரு பார்வை

மதுரை: மதுரை வக்ப்வாரிய கல்லுாரி சார்பில் உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்வு நடந்தது. ஆய்வறிஞர் சோமசுந்தரி வரவேற்றார். சங்க இயக்குநர் பொறுப்பு அவ்வை அருள் தலைமை வகித்தார்.தமிழர் பண்பாட்டுத் தொன்மை - கீழடி அகழ்வாய்வு என்ற தலைப்பில் முன்னாள் ஐ.ஜி., பிரபாகரன் பேசியதாவது: பண்டைய தமிழகத்தில் வழிபாட்டுச் சின்னம் இல்லை, ஜாதிய அமைப்பு இல்லை என்பதையும் விவசாயம் செய்த வரலாற்றையும் கீழடி தெரிவிக்கிறது. சமஸ்கிருதம் தமிழின் தாய் என்று கூறியதைத் தவிடுபொடியாக்கும் வகையில் கீழடி அகழாய்வு விளங்கியது.நகர நாகரிகம் இருந்ததை கீழடி பறைசாற்றுகிறது. 70 விலங்குகளின் எலும்புகள், 13மீட்டர் நீளமுள்ள செங்கல், கல்துாண், ஆணி, செம்பு ஊசி, களிமண் பாத்திரம் என அகழாய்வில் நிறைய கிடைத்துள்ளன. கீழடி நாகரிகத்தில் பிணங்களை எரித்தல் இல்லாததன் மூலம் வடஇந்திய ஆதிக்கம் தமிழகத்தில் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்றார். ஆய்வு வளமையர் ஜான்சிராணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி