உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வருவாய்த்துறையினரின் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த்துறையினரின் காத்திருப்பு போராட்டம்

மதுரை, : மதுரையில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று பணிகளை புறக்கணித்து 2ம் கட்டமாக காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.மாவட்ட தலைவர் கோபி தலைமை வகித்தார். மாநில தலைவர் எம்.பி.முருகையன் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் முகைதீன், நிர்வாகிகள் முருகானந்தம், ராம்குமார், மணிமேகலை, செந்தில்வள்ளி, அரசு ஊழியர் சங்க செயலாளர் நீதிராஜா, மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க செயலாளர் பெரோஸ்கான் பங்கேற்றனர்.துணைத்தாசில்தார் பட்டியல் திருத்தத்தால் பாதித்தோரின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை வெளியிட வேண்டும். அனைத்து நிலை அலுவலருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். சான்றிதழ் வழங்க துணைத்தாசில்தார் பணியிடம் வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து கோரிக்கைகளை வலியுறுத்தினர். சென்னையில் இப்போராட்டம் நடந்தபோது அமைச்சர் உறுதியளித்தபடி தீர்வு கிடைக்காததால் போராட்டம் தொடர்வதாகவும், திங்கள் வரை முடிவு வராவிட்டால் பிப். 27 முதல் காலவரையற்ற போராட்டத்திற்கு தயாராவதாகவும் வருவாய் அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ