உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிற்காமல் சென்ற ரயில் நடவடிக்கைக்கு உத்தரவு

நிற்காமல் சென்ற ரயில் நடவடிக்கைக்கு உத்தரவு

மதுரை: காரைக்குடி அருகே கோட்டையூர் ரயில்வே ஸ்டேஷனில் பாசஞ்சர் ரயில் நிற்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள மதுரை கோட்ட மேலாளர் பிரகாஷ் மீனா உத்தரவிட்டார். திருச்சியில் இருந்து நேற்று காலை 7:05 மணிக்கு ராமேஸ்வரம் பாசஞ்சர் (16849) புறப்பட்டது. காரைக்குடி அருகே கோட்டையூர் ஸ்டேஷனுக்கு காலை 8:20 மணிக்கு வந்து 8:21 மணிக்கு புறப்பட வேண்டும். பிளாட்பாரத்தில் 60க் கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனர். ஓட்டுநரின் கவனக்குறைவால் ஸ்டேஷனில் ரயில் நிற்காமல் சென்றது. பயணிகள் கூச்சலிட்டதையடுத்து அவசர அவசரமாக ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் கடைசியில் இருந்த மகளிர் பெட்டி மட்டும் பிளாட்பாரம் அருகே நின்றது. இதன் காரணமாக பயணிகள் ரயிலில் ஏற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். சிலர் ஸ்டேஷனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கட்டணத்தை திரும்ப பெற்றனர். சிலர் மட்டும் ஏறிய நிலையில் 4 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது. ரயிலை தவறவிட்ட பயணிகள்பலர் விடுமுறை தினத்தன்று சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். மதுரைக் கோட்ட அலுவலகத்தில் புகார் அளித்ததால்,துறை ரீதியாக விசாரணை மேற்கொள்ள கோட்ட மேலாளர்உத்தரவிட்டார். தலைமை லோகோ இன்ஸ்பெக்டர், தலைமை வணிக இன்ஸ்பெக்டர், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதன் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை