உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சில்லரை விலைக்கு மேல் உரம் விற்றால் நடவடிக்கை

சில்லரை விலைக்கு மேல் உரம் விற்றால் நடவடிக்கை

மதுரை: சில்லரை விலையைத் தாண்டி கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை வேளாண் துறை இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மதுரையில் 150 மொத்த கடைகள், 90 சில்லரை கடைகள் மூலம் உரம், பூச்சிமருந்துகள் விற்கப்படுகின்றன. தனியார் கடைகள் மற்றும் மதுரை மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் மொத்தம் 5526 டன் யூரியா இருப்பில் உள்ளது. டி.ஏ.பி., 682 டன், பொட்டாஷ் 993 டன், காம்ப்ளக்ஸ் 2622 டன், சூப்பர் பாஸ்பேட் 613 டன் உரங்கள் இருப்பில் உள்ளன.கடை அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டுள்ள சில்லரை விலையைத் தாண்டி கூடுதல் விலைக்கு உரங்களை விற்கும் கடைகள் மீது விவசாயிகள் புகார் தரலாம். ஜி 2 சான்றதழ் பெற்றவர்கள் மட்டுமே 'பயோ ஸ்டிமுலன்ட்' ஊக்கிகளை விற்க வேண்டும். உரங்களை விற்றவுடன் 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யவேண்டும். பில்லுக்கும் இருப்புக்கும் வித்தியாசம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டுமே உரங்களை விற்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை