உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அ.தி.மு.க.,வில் அ.ம.மு.க.,வினர்

அ.தி.மு.க.,வில் அ.ம.மு.க.,வினர்

மதுரை: அ.ம.மு.க.,வில் இருந்து மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் நேற்று அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களை முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ வரவேற்றார்.அ.தி.மு.க.,வில் இணைந்த அவைத் தலைவர் கோவிந்தராஜ், மேற்கு 3ம் பகுதி செயலாளர் தங்கராமு, பொருளாளர் செல்வம், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், இளைஞரணி மாவட்ட இணை செயலாளர் சிவமுருகன், வட்ட செயலாளர்கள் முருகேசன், ஜெயபாண்டி, மதன்குமார், மாணிக்கம், நரேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளை செல்லுார் ராஜூ கவுரவித்தார்.ஜெயபால் கூறியதாவது: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கில் பின் அ.தி.மு.க., வில் இணைந்துள்ளோம். இரட்டை இலை எந்த இடத்தில் உள்ளதோ அதை வெற்றி பெற வைக்க வேண்டும். பிரிவினைவாதத்தை தவிர்த்து அ.தி.மு.க.,வுடன் ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை