உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தடையை மீறி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் கைது

தடையை மீறி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் கைது

மதுரை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து மதுரையில் நேற்று தடையை மீறி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலாளர்கள், நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.செல்லுாரில் நகர் மாவட்டம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் செல்லுார் ராஜூ, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் தலைமையில் நர்சுகள் 'யார் அந்த சார்' என்ற வாசகத்துடன் பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு போலீசார் நிராகரித்தனர். ஆனாலும் திட்டமிட்டப்படி நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் செல்லுார் ராஜூ பேசிக்கொண்டிருக்கும்போதே போலீசார் மேடை ஏறி நிறுத்துமாறு பலமுறை கூறினர். 'மதியம் 12:00 மணி வரை அனுமதி கேட்டுள்ளோம். பேசிதான் ஆவேன்' என செல்லுார் ராஜூ ஆவேசமாக கூறினார். அனைவரும் கைது செய்ய பட்டு, மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மேலுார்

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் முன்னிலை வகித்தார். ராஜன் செல்லப்பா பேசுகையில், ''டங்ஸ்டன் விவகாரத்தில் ஏலம் விட மத்திய அரசுக்கு தி.மு.க., அரசு அனுமதி கொடுத்துவிட்டு தற்போது இரட்டை வேடம் போடுகிறது. தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்முறைகள் தி.மு.க, அரசிற்கு வீழ்ச்சியை ஏற்படுத்தும். ஜன. 7 டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறும் நடை பயண பேரணியில் அ.தி.மு.க., பங்கேற்கும்'' என்றார்.

கள்ளிக்குடி

புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ''தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் தி.மு.க., அரசு அதை கண்டு கொள்ளாமல் துாக்கத்தில் உள்ளது. போலீஸ் துறை தி.மு.க., அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது'' என்றார். பின்னர் உதயகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை