உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் அ.தி.மு.க., பழனிசாமி அறைகூவல்

குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் அ.தி.மு.க., பழனிசாமி அறைகூவல்

மதுரை : 'வருகிற 2026 தேர்தலில் தி.மு.க.,வின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' என திருமங்கலம் தொகுதி டி.குன்னத்துாரில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார். மதுரை மாவட்டத்தில் 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' நான்காம் கட்ட பிரசாரத்திற்காக அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று விமானத்தில் மதுரை வந்தார். அவரை அ.தி.மு.க.,வினர் மேளதாளங்கள் முழங்க வரவேற்றனர். எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார், புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா, முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லுார் ராஜூ, ஐ.டி.,விங் செயலாளர் ராஜ் சத்யன், திருப்பரங்குன்றம் கிழக்கு பகுதி செயலாளர் ரமேஷ், கவுன்சிலர் முருகன், மருத்துவ அணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் பங்கேற்றனர். பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம், கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்கப் பெருமாள், த.மா.கா., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உட்பட கூட்டணி கட்சியினரும் திரளாக கலந்து கொண்டனர். குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி திருமங்கலம் தொகுதி டி.குன்னத்துாரில் உள்ள அம்மா கோயிலில் பழனிசாமி பேசியதாவது: இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கியது அ.தி.மு.க., ஆட்சி தான். வேளாண் இயந்திரங்களுக்கு 50 சதவீத மானியம் அளித்தோம். விவசாயிகளுக்கு விலையில்லா மாடு, ஆடு, கோழி வழங்கினோம். 2026ல் ஆட்சிக்கு வந்தால் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலம் இல்லை என்றாலும், நிலத்தை வாங்கி கான்கிரீட் வீடு கட்டிக் கொடுப்போம். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் முழுமையான சிகிச்சை அளிக்கப்படும். அ.தி.மு.க .,வின் பத்தாண்டுகால ஆட்சியில் 67 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், 27 பாலிடெக்னிக் கல்லுாரிகள், 7 சட்டக்கல்லுாரிகள், 4 வேளாண்மை கல்லுாரிகள், நிறைய பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் தி.மு.க., ஆட்சியில் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. நாலாண்டு கால தி.மு.க., ஆட்சியில் மதுரை மாவட்டத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் 2026 என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ