உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அனைத்து வரிவிதிப்பு 3 நாள் சிறப்பு முகாம் மாநகராட்சி ஏற்பாடு

அனைத்து வரிவிதிப்பு 3 நாள் சிறப்பு முகாம் மாநகராட்சி ஏற்பாடு

மதுரை: மதுரை மாநகராட்சியின் 100 வார்டு மக்களும் பயன்பெறும் வகையில் இன்று (ஜூலை 1) முதல் ஜூலை 3 வரை அனைத்து வரிவிதிப்புகளுக்கான சிறப்பு முகாம் மாநகராட்சி பில்லர் ஹாலில் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடக்கிறது.மூன்று நாட்களும் புதிய சொத்து வரி,சொத்து வரி பெயர் மாற்றம், காலி மனை வரிவிதிப்பு, புதிய பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு, தொழில் உரிமம், விளம்பர பலகை அனுமதி, குடியிருப்பில் இருந்து வணிக பயன்பாட்டுக்கு மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள்தொடர்பாக புகார்கள் அளிக்கலாம்.இதில் பங்கேற்கும் மக்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். மனுக்கள் மீது ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இச்சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை