பழைய மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி
உசிலம்பட்டி:உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் 1979-81 ஆண்டுகளில் பயின்ற பிளஸ் 2 மாணவர்கள் மூன்றாம் முறையாக சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் பரமசிவன் தலைமை வகித்தார். உதவித்தலைமை ஆசிரியர் பொன்ரமேஷ் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர் அரவிந்தன் வரவேற்றார். முன்னாள் தலைமை ஆசிரியர் டேவிட்பிரதாப்சிங், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜான்கோயில்பிள்ளை, கலாமணி, ஆசிரியர் ஆனந்தன் மற்றும் பழைய மாணவர்கள் பங்கேற்றனர். மூன்றாவது முறையாக சந்தித்த மாணவர்கள் தங்கள் பழைய நினைவுகளை மீண்டும் பகிர்ந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர்கள் பாலமுருகன், பாலன் அனைவருக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கினர். முத்துராமலிங்கம் நன்றி கூறினார்.